சனி, 13 பிப்ரவரி, 2016

உண்டியல் பணம் அம்மன் கழுத்திலிருந்த தாலி மற்றும் பொருட்கள் திருட்டு

, தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த உண்டியல் பணம்
 மற்றும் அம்மன்
 கழுத்தில் இருந்த தாலி மற்றும் ஏனைய பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்று தொடர்ச்சியாக மண்டலாபிஷேகம் இடம்பெற்று வந்தமை 
குறிப்பிடதக்கது
நேற்றைய தினமும் பூஜைகள் இடம்பெற்று பொதுமக்கள் பூஜை வழிபாட்டில் ஈடுப்பட்டு வீடு திரும்பிய பின்னரே ஆலயம் உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

சுட்டும் வெட்டியும் வர்த்தகர்கொலை ஒருவர் படுகாயம்!!!

வெள்ளை வேனில் வந்­த­தாக கூறப்­படும் அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் சுட்டும் வெட்­டியும் வர்த்தகர் ஒருவர் கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.  
இச்­சம்­பவம் கடவத்தை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கோன­ஹேன பகு­தியில்இன்று காலை இடம்­பெற்­றுள்­ளது.
சம்­ப­வத்தின் போது 44 வய­து­டைய வேபட, கோன­ஹேன பகு­தியைச் சேர்ந்த சமன் பிரி­யந்த என்ற சிறு வர்த்­த­கரே
 உயி­ரி­ழந்­துள்ளார்.
படு­கா­ய­ம­டைந்த 42 வய­தன அவ­ரது நண்பர் என கரு­தப்­படும் நபர் ராகம போதனா வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வரு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>




சனி, 19 டிசம்பர், 2015

பல காணிகள் இராணுவ கட்டுபாட்டில் இருந்து விரைவில் விடுவிக்கப்படும் ?

வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி தமது தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதனால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மீள்குடியேற்றபடாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் :
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 11 டிசம்பர், 2015

தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் கிர்ணிப் பழம்

அழகை தலை முதல் பாதம் வரை பாதுகாக்கும் அற்புதக் கவசம் கிர்ணிப் பழத்திற்கு(மிலோணன் ) உண்டு.இந்த பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால் கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் அள்ளித் தருவதில் வள்ளலாக இருக்கிறது.

*ஐம்பது வயதுக்கு மேல் தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து, வறண்டு போய்விடும். இவர்கள் பியூட்டி பார்லரில் வேக்சிங் அல்லது திரெடிங் போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும். இதற்கு கிர்ணிப்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ் இரண் டையும் சம அளவு கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.

*நூறு கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் – தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாவதோடு முடியின்
 பளபளப்பும் கூடும்.
*கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் இரண்டையும் சம அளவு எடுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு வெள்ளரி ஜூஸ் சேர்த்து தலை முடி முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். இது எண்ணெய் தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
*ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிர்ணி விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 30 நவம்பர், 2015

எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் தகவல் வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி நோயாளிகள்!

இலங்கையில் வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாக எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய எய்ட்ஸ் தடுப்பு பிரிவு மருத்துவ இயக்குனர் சிசிர லியனகேவிடம் வியவிய போது இவ்வாறு 
குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 மாதங்களுள் இதுவரை எச்.ஐ.வி. நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள 167 பேர் இந்த நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்...அத்துடன் நாளை உலக எய்ட்ஸ் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 19 நவம்பர், 2015

குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணம்

வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய கேணியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்களான இரு இளைஞர்கள் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் 
ஆலய கேணியில்
 குளிக்கச் சென்றுள்ளார்கள். மழைகாலம் என்பதால் ஆலய கேணி நீர் நிறைந்து காணப்பட்டுள்ளது. கேணியில் குளித்துக் கொண்டிருந்த இருவரும் நீரில் மூழ்குவதை ஆலயத்துக்கு வந்தவர்கள் 
கண்டு மீட்டனர்.
அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளார். உடனடியாக இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் மயக்கமுற்ற இளைஞர் தலையில் காயமடைந்தார்.
 கொற்றாவத்தையைச் சேர்ந்த ப.கௌசிகன்(வயது 26) என்பவரே வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவராவார். அல்வாய் வடமேற்கைச் சேர்ந்த எம்.செந்தூரன்(வயது 26) என்ற இளைஞரே நீரில் மூழ்கி உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. -
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 15 நவம்பர், 2015

கொடிய விசப்பாம்புகள் படையெடுக்கின்றன வடக்கில் ??

கடும் மழை வெள்ளம் காரணமாக கொடிய விசப்பாம்புகள் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் பாடசாலைகள், கோவில்கள் 
போன்ற மக்கள் நடமாடும் இடங்களிலும் புகுந்துவருவதாகத் தெரியவருகின்றது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>