வெள்ளி, 24 ஜனவரி, 2014

பாசமாகநரியை வளர்த்து வரும் தம்பதியினர்

பிரான்சில் இளம் நரி ஒன்றை தம்பதிகள் ஒருவர் மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகின்றனர்.
பிரான்சில் கடந்த 2010ம் ஆண்டில் நடந்த கார் விபத்து ஒன்றில் நரி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
அப்போது அவ்வழியே வந்த டைடிய டலேன்ஸ் என்பவர், இறந்த நரியின் அருகிலிருந்த இளம் நரியை தன் வீட்டிற்கு எடுத்து சென்றார்.

இவரும் இவரது மனைவி ஆனியும், Zouzou என்ற இந்த இளம் நரியை பாசத்துடன் வளர்த்து வந்தனர்.
இதையறிந்த பிரான்ஸின் வேட்டை மற்றும் காட்டு விலங்குகள் தேசிய அலுவலம்(The National Office of Hunting and Wild Animals) இத்தம்பதிகள் மீது, சட்டத்திற்கு புறம்பாக காட்டு விலங்கினை வளர்த்த காரணத்திற்காக வழக்குபதிவு செய்தது.

இவ்வழக்கில் 300 யூரோக்கள்(409 டொலர்கள்) அபராதம் விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, இதனை செலுத்திய தம்பதியினர் நரியை தங்களிடமே இருக்க வேண்டுமென கோரி நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் மகிழ்ச்சி வெள்ளத்தில், நரியை மிகவும் அன்புடனும், அரவணைப்புடனும் வளர்த்து வருகின்றனர்.
 

செவ்வாய், 14 ஜனவரி, 2014

நிலாவரை நவக்கிரி பகுதிகளில் அமைந்திருந்த முகாம்கள் அகற்றப்பட்டுள்ளது

வலி­காமம் கிழக்கின்  நிலா­வரை நவக்கிரி,பகு­தி­களில் அமைந்­தி­ருந்த சிறு­மு­காம்­களும் அகற்­றப்­பட்­டுள்­ளன.யாழ்ப்­பா­ணத்தில் படை­யி­னரின் உயர்­பா­து­காப்பு வல­ய­மாக்­கப்­பட்டு அவர்­களின் முகாம்­க­ளா­கவும் காவ­ல­ரண்­க­ளா­கவும் இருந்து வந்த பல வீடுகள் உரி­மை­யா­ளர்­க­ளிடம் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் மீள ஒப்­ப­டைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

நாவற்­குழி, கைதடி, நுணாவில் பிர­தே­சங்­களில் உள்ள இரா­ணுவ முகாம்கள் முற்­றாக மூடப்­பட்­ட­துடன் இப்­ப­கு­தி­களில் முகா­மிட்­டி­ருந்த இரா­ணு­வத்­தினர் சாவ­கச்­சே­ரியில் அமைந்­துள்ள பிர­தான முகா­மிற்கு மீளச்­சென்­றுள்­ளனர்.

அத்­துடன் யாழ்ப்­பா­ணத்தில் மிகவும் சர்ச்­­சைக்­கு­ரிய முகா­மாக இருந்து வந்த செம்­மணி படை முகாங்­களும் காவ­ல­ரண்­க­ளும் அகற்­றப்­பட்­டுள்­ளன.
கடந்த 1995ம் ஆண்டு முதல் படை­யி­னரின் முகாம்­க­ளாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருந்த வீடு­களே பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

வலி.வடக்கின் வலித்­தூண்டல் பகு­தியில் அமைந்­தி­ருக்­கின்ற இரு படை­மு­காம்­களும் முற்­று­மு­ழு­தாக விடு­விக்­கப்­பட்டு பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.
அதே­வேளை தெல்­லிப்­பழை அம்பன் பகு­தியில் தனியார் வீடொன்றில் அமைந்­தி­ருந்த முகா­மொன்றும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து இந்த வீட்டின் உரி­மை­யா­ளர்கள் அங்கு சென்று குடி­யே­றி­யுள்­ள­துடன் வீட்டின் வேலி­க­ளையும் அமைத்து வரு­கின்­றனர்.

மாதகல் தபால் சந்­திக்கு அருகில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இரா­ணுவக் காவ­ல­ரண்­களும் நேற்று முதல் திடீ­ரென அகற்­றப்­பட்­டுள்­ளன.

வட­ம­ராட்சி பிர­தே­சத்தில் மந்­திகை மற்றும் மாலி சந்­தியில் அமைந்­தி­ருந்த சிறிய முகாம்­களும் நேற்று முன்­தினம் அகற்­றப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
மேலும் வலி­காமம் கிழக்கின் நவற்கிரி, நிலா­வரை பகு­தி­களில் அமைந்­தி­ருந்த சிறு­மு­காம்­களும் அகற்­றப்­பட்­டுள்­ளன.

வலி. மேற்குப் பிர­தேச சபைக்­குட்­பட்ட வட்டு.கேணி­ய­டியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சர்ச்­சைக்­கு­ரிய இரா­ணுவ முகாம்­களும் அகற்­றப்­பட்­டுள்­ளன.
1995ம் ஆண்டு யாழ். குடா­நாட்­டினை இரா­ணு­வத்­தினர் கைப்­பற்­றிய போது இந்தப் படை­மு­காம்கள் அமைக்­கப்­பட்­டன.

யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் குறித்த முகாம்­களை அகற்­று­மாறு வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­களும் உல­க­நா­டுகள் பலவும் இலங்கை அர­சாங்­கத்­தினை வலி­யு­றுத்தி வந்­த­போதும் அகற்­றப்­ப­டா­ம­லி­ருந்த இந்த முகாம்கள் யாழ். மாவட்­டத்­திற்­கான இரா­ணுவக் கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் உத­ய­ பெ­ரேரா பத­வி­யேற்ற பின்னர் திடீர் திடீ­ரென தற்­போது அகற்­றப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
 

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

10 வயது சிறுமி சித்ரவதை செய்து கொலை


பாகிஸ்தானில் 10 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் அல்தாப் முகமது, லாகூரின் கன்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும் இவருக்கு நசீரா என்ற மனைவியும், இம்ரார் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 3 மாதத்துக்கு முன், வீட்டுவேலைக்காக இர்ம் ரம்ஷான் என்ற 10 வயது சிறுமியை முகமது அழைத்துவந்தார்.

சில மாதங்களுக்கு முன் தந்தையை இழந்த ரம்ஷான், 6 சகோதரிகளில் இளையவர், இந்த சிறுமிக்கு ரூ.3,000 சம்பளம் தருவதாக முகமது கூறியுள்ளார்.
ஆனால் ரம்ஷான் பணத்தை திருடியதாக கூறி அடிக்கடி அவளுடைய கைகளை கட்டிப்போட்டு சித்ரவதை செய்துள்ளனர்.

இவ்வாறு இரு தினங்களாக அடித்து கொடுமைப்படுத்தியதால், மயங்கி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து லாகூர் எஸ்.பி. உமர் ரியாஸ் கூறுகையில், கடந்த 3 மாதத்துக்கு முன் ரம்ஷானை கூட்டி வந்துள்ளார்.

ஆனால் அவரது மனைவி, மகன் ஆகியோருடன் சேர்ந்து முகமது இந்த சிறுமியை பிளாஸ்டிக் பைப்களாலும் கைகளாலும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
கடந்த 3 தினங்களுக்கு முன் ரம்ஷான் ரூ.100 திருடிவிட்டதாக கூறி, அவளது கைகளை கட்டிப்போட்டு அடித்துள்ளனர்.

இரண்டு நாள் சித்ரவதையால் அந்த சிறுமி மயங்கி விழுந்து உள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் அச்சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டாள்.
இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுமியின் உடலில் 23 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து முகமது, மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளர் என்று தெரிவித்துள்ளார்.
 

அளவெட்டியில் அதிசயமான ஆட்டுக்குட்டி


யாழ்.அளவெட்டிப் மலைவேம்படியைச்சேர்ந்த கிராம அலுவலரான எஸ்.துவாரகன் என்பவரது வீட்டில் வளர்த்த ஆடொன்று  வித்தியாசமான முக அமைப்பை கொண்ட குட்டியொன்றை கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈன்றுள்ளது.
மேற்படி ஆட்டுக்குட்டியின் இரு கண்களும் மிக அருகில் நெருக்கமாக இருக்கிறது. இதனை அப்பகுதியினைச் சேர்ந்த பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.



 

வெள்ளி, 3 ஜனவரி, 2014

உங்களால் இந்தக்கொடுமை பார்க்கமுடிமா? காணோளி !

       இந்த மழலைகள் செய்த பாவம் தான் என்ன?
 

நீங்கள்ஒரு போதும் பார்க்காத பாட்டியின் கைவைத்தியம்

நீங்கள்அனைவரும்கண்டிப்பாகபார்க்கவேண்டியஅசத்தலான கைவைத்தியம் நம்பமுடியாத அதிர்ச்சி !காணோளி..பார்த்தவர்கள்உங்கள்
நண்பர்களுக்கும்பகிர்ந்திடுங்கள் ..நன்றி..

வியாழன், 2 ஜனவரி, 2014

சிவனொளிபாதமலைக்கு செல்வதை தவிர்க்குமாறு !!

சிவனொளிபாதமலைக்கு எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான நேரத்தில் செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு யாத்திரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சிவனொளிபாதமலை உச்சியில் தூண்டா மணி விளக்கு, காண்டாமணி ஆகியன பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால் மேலே குறிப்பிட்ட நேரத்தில் அங்கு செல்வதனை தவிர்த்துகொள்ளுமாறு சிவனொளி பாதமலையின் விஹாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சுமார் 20,000 கிலோவிற்கு மேற்பட்ட நி
றையுள்ள பொருட்களே சிவனொளிபாதமலையின் உச்சிக்கு கொண்டுசெல்லப்படவிருக்கின்றது.
இந்த பொருட்கள் லக்ஸபான வாழைமலை தோட்ட மைதானத்திலிருந்து எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டரில் மலை உச்சிக்கு இலங்கை  விமானப்படையினரால் இன்று வியாழக்கிழமை காலை முதல் கொண்டு செல்லப்படுகின்றன.

பனி மூட்டம் இல்லாத நேரங்களில் ஒரு தடவைக்கு 1000 கிலோ அல்லது 2000 கிலோ நிறையுள்ள பொருட்கள் மலையுச்சிக்கு கொண்டு செல்லப்படவிருக்கின்றது என்று விமானப்படையினர் தெரிவித்தனர்.

புதன், 1 ஜனவரி, 2014

இராட்சத அதிய கொடிக்கிழங்கு


கண்டியில் 300 கிலோகிராம் நிறையுடைய இராட்சத கொடி கிழங்கு ஒன்று கண்டி பிரதேசத்தில் தோன்றப்பட்டுள்ளது.

கண்டி, குருகொடை சுலைமான் வீதியை சேர்ந்த எம்.ஜே.ஏ.அமானுல்லா என்பவரின் வீட்டுத் தோட்டத்திலே இவ்வாறு இராட்சத கிழங்கு ஒன்று தோண்டப்பட்டுள்ளது..

மேற்படி நபர் தனது தோட்டத்தில் சுமார் ஒரு வருடங்களுக்கு முன் இக் கிழங்குக்கான விதையை பயிரிட்டதாகவும் கடந்த மூன்று தினங்களாக கிழங்கை தோண்டி எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.2014


அன்பர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அன்புள்ள வாசகர்களுக்கும் உறவு இணையங்களுக்கும் எமது நிலாவரை இணையம் நவற்கிரி இணையங்களின்சார்பாக மலர்ந்த.01-01.2014ஆண்டின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகலசெல்வங்களும் பெற்று . வாழ்க என்றும் நலமுடன்
http://lovithan.blogspot.ch/2014/01/2014.html