செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டமை சார்பாக விசாரணையை ??

வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டமை சார்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
கல்குடா கல்வி வலயதுக்குட்பட்ட வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் செல்வராஜா வரதன் (வயது 09) என்னும் 4ம் ஆண்டு கல்வி கற்பவன். கடந்த 2014.09.23ம் திகதி அன்று பாடசாலையில் வைத்து அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஜனாப்.என்.எம்.நசீர் என்பவரால் தாக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதி சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிகின்றேன்.
இத்தாக்குதலை மேற்கொண்ட ஆசிரியர் சார்பாக நியாயமான நடவடிக்கைகள் நடைபெற்றதாக தகவல் கிடைக்கவில்லை. எனவே உரிய முறையில் விசாரணையை மேற்கொண்டு இச் சிறுவனுக்கு துன்பம் விளைவித்த இவ்ஆசிரியர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வருமாறு வேண்டுகின்றேன். தங்கள் நடவடிக்கை சார்பாக பதிலை எதிர்பார்க்கின்றேன் என இவ் மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரதிகள் வாழைச்சேனை கல்குடா வலய வலயக் கல்விப் பணிப்பாளர், வாழைச்சேனை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி, வாழைச்சேனை பொலிஸ் நிலையம் பொலிஸ் பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு மாவட்ட டி.ஐ.ஜி, வாழைச்சேனை ஏ.எஸ்.பி. ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 24 செப்டம்பர், 2014

தீ: விபத்தில் 18 கடைகள் நாசம்

மாவனெல்லை நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

நாகேந்திரபுரம் பகுதியில் வாகன விபத்து! ஒருவர் பலி

 
 கிளிநொச்சி புளியம்பொக்கனை – நாகேந்திரபுரம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்  உயிரிழந்துள்ளார். இந்த  விபத்து நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிறியரக வானொன்றும், வைக்கோல் ஏற்றிய லொறியொன்றும் பாதசாரியை மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்செய்தி வெளிவரும் வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 20 செப்டம்பர், 2014

பதற்றம்! இரு அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மோதல்

 பதுளை - சோரணதோட பிரதேசத்தில் இரு அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு இடையிலேயே, இன்று காலை 8.00 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 10 செப்டம்பர், 2014

விஜய் முருகதாஸ் மோதல்? கத்திக்கு மேலும் சிக்கல்?


கத்தி இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் கத்தி படத்திற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது கத்தி படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஆரம்பமான நாள் முதல் இன்றுவரை பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதால் இப்படத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தது.
இந்நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
பேசிக்கொள்ளாத விஜய் முருகதாஸ்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் கத்தி படத்தின் படப்பிடிப்பு நடந்ததாம். அப்போது படப்பிடிப்புக்கு வந்த முருகதாஸும், விஜய்யும் அருகருகே உட்கார்ந்திருந்த போதும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லையாம்.
உதவியாளர்கள் உதவியால்
அன்றைய தினம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லையாம். இதனால் அன்றைய தினம் எடுக்கவிருக்கும் காட்சிகளை முருகதாஸ் தனது உதவியாளர்களிடம் கூற உதவியாளர்கள் விஜய்யிடம் காட்சியை விளக்கினர்.
உருவான சிக்கல்
விஜய்யும் இயக்குநர் முருகதாஸும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்ததால் படக்குழுவினர் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று முருகதாஸின் உதவியாளர்களுக்கே தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
மாமனாருக்கு சிக்கல்
கத்தி படத்தின் தயாரிப்பாளர் பிரச்சனையால் லண்டனில் இருக்கும் விஜய்யின் மாமனாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முருகதாஸ் மீது அதிருப்தி
தயாரிப்பாளர் இவ்வளவு வில்லங்கமானவர் என்பதை முருகதாஸ் தன்னிடம் திட்டமிட்டே மறைத்ததாக விஜய் நினைப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப் படுகின்றன. இதனால் விஜய்க்கு முருகதாஸ் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலவச விளம்பரம்
மேலும் கத்தி படத்திற்கு ஊடகங்களிடம் இருந்து இலவச விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக படத்தின் தயாரிப்பாளர் குறித்த ரகசியங்களை முருகதாஸ் வேண்டுமென்றே கசியவிட்டதாகவும், அது தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.
மருத்துவமனையில் அனுமதி
இப்படி கத்தி படத்திற்கு மாற்றி மாற்றி ஏற்பட்ட சிக்கல்தான் முருகதாஸ்க்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்திவிட்டது என்றும் கூறுகின்றனர். இதுகுறித்து முருகாதாஸின் பிஆர்ஓ ரியாஸிடம் கேட்ட போது, அஜீரணக் கோளாறு காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்