சனி, 19 டிசம்பர், 2015

பல காணிகள் இராணுவ கட்டுபாட்டில் இருந்து விரைவில் விடுவிக்கப்படும் ?

வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி தமது தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதனால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மீள்குடியேற்றபடாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் :
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 11 டிசம்பர், 2015

தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் கிர்ணிப் பழம்

அழகை தலை முதல் பாதம் வரை பாதுகாக்கும் அற்புதக் கவசம் கிர்ணிப் பழத்திற்கு(மிலோணன் ) உண்டு.இந்த பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால் கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் அள்ளித் தருவதில் வள்ளலாக இருக்கிறது.

*ஐம்பது வயதுக்கு மேல் தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து, வறண்டு போய்விடும். இவர்கள் பியூட்டி பார்லரில் வேக்சிங் அல்லது திரெடிங் போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும். இதற்கு கிர்ணிப்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ் இரண் டையும் சம அளவு கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.

*நூறு கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் – தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாவதோடு முடியின்
 பளபளப்பும் கூடும்.
*கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் இரண்டையும் சம அளவு எடுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு வெள்ளரி ஜூஸ் சேர்த்து தலை முடி முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். இது எண்ணெய் தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
*ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிர்ணி விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 30 நவம்பர், 2015

எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் தகவல் வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி நோயாளிகள்!

இலங்கையில் வாரத்திற்கு 4 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாக எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய எய்ட்ஸ் தடுப்பு பிரிவு மருத்துவ இயக்குனர் சிசிர லியனகேவிடம் வியவிய போது இவ்வாறு 
குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 மாதங்களுள் இதுவரை எச்.ஐ.வி. நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள 167 பேர் இந்த நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்...அத்துடன் நாளை உலக எய்ட்ஸ் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 19 நவம்பர், 2015

குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணம்

வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய கேணியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்களான இரு இளைஞர்கள் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் 
ஆலய கேணியில்
 குளிக்கச் சென்றுள்ளார்கள். மழைகாலம் என்பதால் ஆலய கேணி நீர் நிறைந்து காணப்பட்டுள்ளது. கேணியில் குளித்துக் கொண்டிருந்த இருவரும் நீரில் மூழ்குவதை ஆலயத்துக்கு வந்தவர்கள் 
கண்டு மீட்டனர்.
அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளார். உடனடியாக இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் மயக்கமுற்ற இளைஞர் தலையில் காயமடைந்தார்.
 கொற்றாவத்தையைச் சேர்ந்த ப.கௌசிகன்(வயது 26) என்பவரே வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவராவார். அல்வாய் வடமேற்கைச் சேர்ந்த எம்.செந்தூரன்(வயது 26) என்ற இளைஞரே நீரில் மூழ்கி உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. -
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 15 நவம்பர், 2015

கொடிய விசப்பாம்புகள் படையெடுக்கின்றன வடக்கில் ??

கடும் மழை வெள்ளம் காரணமாக கொடிய விசப்பாம்புகள் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் பாடசாலைகள், கோவில்கள் 
போன்ற மக்கள் நடமாடும் இடங்களிலும் புகுந்துவருவதாகத் தெரியவருகின்றது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் வீட்டில் திருட்டு


மருதனார் மடம் ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் வீட்டில் 18ஆம் திகதி இரவு வாள்களுடன் நுழைந்த கும்பலொன்று, வீட்டிலிருந்தவர்களை மிரட்டி 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடமைகளை 
கொள்ளையடித்து 
சென்றுள்ளதென சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். நள்ளிரவு வேளையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், நகை மற்றும் பொருட்களை இவ்வாறு கொள்ளையடித்துச் 
சென்றுள்ளனர்.
இது தொடர்பில், குருக்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்மருதனார் மடம் ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் 
வீட்டில் 18ஆம் 
திகதி இரவு வாள்களுடன் நுழைந்த கும்பலொன்று, வீட்டிலிருந்துவர்களை மிரட்டி 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதென சுன்னாகம் 
பொலிஸார் தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 17 அக்டோபர், 2015

மரணஅறிவித்தல் திருமதி மரியா திரேசா ஞானப்பிரகாசம்

தோற்றம் : 23 மே 1938 — மறைவு : 13 ஒக்ரோபர் 2015
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மரியா திரேசா ஞானப்பிரகாசம் (இராசமலர்)அவர்கள் 13-10-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை மார்கிறெட்(மலர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மரியா அந்தோனியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சவரிமுத்து ஞானப்பிரகாசம்(தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்றனட் சசிக்கலா(கனடா), Godfrey பிறையன்(அவுஸ்திரேலியா), ஏட்றியன்(ஞானி- கனடா), ஜுடித் சுச்சித்ரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அலோஷியஸ் அருமைத்துரை(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சண்முகராஜா(ஷன்- கனடா), அனுஷா(அவுஸ்திரேலியா), சறோ(கனடா), Dr.டிலிப்குமார் மேதர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, கேட்ரூட் புஷ்பம், பெனடிக்ற் ஜெயரட்னம் மற்றும் சற்குனம்(அவுஸ்திரேலியா), செல்வராணி(இங்கிலாந்து), கத்தரின்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

அபிஷேக், அஷ்வினி, பிரசன்னா, பிரஷாந்தி, பிரவீன், அரவிந்த், அஞ்சலி, அஷ்மிதா, கேஷினி, நிரோஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நவற்கிரி.கொம்   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தவர்க்கு எமது 
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/10/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/10/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 19/10/2015, 10:00 மு.ப
முகவரி: Prince of Peace 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada. 
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 19/10/2015, 12:00 பி.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada. 
தொடர்புகளுக்கு
ஏட்றியன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19056401779
செல்லிடப்பேசி: +16478851778
சுச்சித்ரா(மகள்) — கனடா
தொலைபேசி: +19054773529
செல்லிடப்பேசி: +14169043529
பிறையன்(மகன்) — கனடா
தொலைபேசி: +161393083005
சசி(மகள்) — கனடா
தொலைபேசி: +14162890227

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 10 அக்டோபர், 2015

வலி வடக்கில் மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் நாளை திறப்பு

 வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் மூன்று கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
அரசாங்கத்தின் கிராமத்திற்கு பத்து லட்சம் ரூபா என்ற நிதித் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராம சேவகர் அலுவலகங்களை, பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் திறந்து வைக்கவுள்ளார்.
அளவெட்டி வடக்கு ஜே 216, வீமன்காமம் ஜே 236, மற்றும் வறுத்தலைவிளான் ஜே.241 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் இந்த கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
இந் நிகழ்வுகளில் வலி. வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன், வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சயின் காகேசன்துறைத தொகுதி அமைப்பாளர் ஸ்ரீதாமோதரராசாவும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 5 அக்டோபர், 2015

வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில்

சுதுமலையில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு இளைஞர் படுகாயத்திறக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுதுமலை அம்மன்கோவில் பகுதயில் இரண்டு மோட்டார் சையிக்கிளில் வந்த நான்கு பேர் இந்த வாள் வெட்டை மேற்க் கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
சுதுமலை வடக்கு சுதுமலையைச்சேர்ந்த எஸ்.ஸ்ரீகிருஸணகுமார் வயது 26 என்ற இளைஞரே வெட்டுக்காயத்திறக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையின் 24 ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளவராகும்.
குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக மானிப்பாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 1 அக்டோபர், 2015

மூச்சுத்திணறி ஒன்றைரை மாதக்குழந்தை பரிதாபமாக உயிழப்பு

வீட்டுக்காரர்களின் அசண்டையீனத்தால் ஒன்றரை மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு ஊரெழு மேற்கில் இடம்பெற்றுள்ளது.
நேற்றுப் பிற்பகல் 5.30 மணியளவில் தாயார் பிள்ளைக்கு
 பால் கொடுத்து தலையணையில் உறங்கவைத்துவிட்டு உடுப்பு துவைப்பதற்காகச் சென்றுள்ளார். பக்கத் தலையணைகள் இன்றி ஒரு தலையணையில் கிடத்தப்பட்ட பிள்ளை, தலை திரும்பி முகம் குப்புற கவிழ்ந்தமையால் அது மூச்சுச் திணறி உயிரிழந்துள்ளது.
 காந்தன் சந்தோஸ் என்ற ஒன்றரை மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது. இரவு 7 மணியளவில் பிள்ளை வளர்த்தப்பட்ட இடத்துக்குச் சென்று பார்த்தபோது பிள்ளை குளிர்ந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு 
சென்ற போதிலும் வைத்தியர் ஏற்க மறுத்த நிலையில் பிள்ளையை அவசரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு பிள்ளை இறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்திய நிலையில் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டு இன்று
 யாழ்ப்பாணம் 
நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரயையை மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம்
 ஒப்படைக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

1115 பேர் இலங்கையில்தூக்கு தண்டனைக் கைதிகள்

இலங்கை சிறைச்சாலைகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளத்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகன புஷ்பகுமார தெரிவித்தார்.
இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்து மேல் முறையீடு சமர்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஆசிரியர் தாக்கி் பாடசாலை மாணவி மருத்துவமனையில்

புத்தூர் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர், மாணவியின் கன்னத்தில் அறைந்தமையினால் மயக்கமுற்ற மாணவி  அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் 
நேற்று வியாழக்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்று பாடப்புத்தகம் கொண்டு வராத மாணவிக்கு தனது புத்தகத்தை மாற்றிக் கொடுத்து உதவியமையை அவதானித்த ஆசிரியர், குறித்த மாணவியின் கன்னத்தில் கடுமையாக பலமுறை 
அறைந்துள்ளதாக மேற்படி மாணவி தெரிவித்துள்ளார். தரம் 11இல் கல்வி கற்கும் ரவீந்திரன் நிருஸா என்ற மாணவியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 5 ஆகஸ்ட், 2015

முன்னாள் பிரதமர் மீது பாலியல் குற்றச்சாட்டு???

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் Sir Edward Heath, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர் என ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர் 
கூறுகையில், அப்போது தன்னை அழைத்து சென்றவர் Sir Edward Heath தான் என்பதை அறியவில்லை என்றும், முன்னாள் பிரதமர்
 Margaret Thatcher உடன் 
அவர் இருக்கும் புகைப்படத்தை வைத்தே அடையாளம் கண்டு கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சம்பவம் நடைபெற்ற இரண்டு மாதத்தில் புகார் தெரிவித்தும், எவரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை என்றும், தான் பொய் கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்தாக 
குறிப்பிட்டுள்ளார்
மேலும், சம்பவம் நடந்தபோது தனக்கு வயது 12 இருக்கும் எனவும், அது 1961ம் ஆண்டு நடந்த சம்பவம் என தெரிவித்த அவர், 
வீட்டை விட்டு வெளியேறி வந்த காலக்கட்டத்தில் தான் தன்னை ஒரு தெரு வீதியில் வைத்து Sir Edward 
Heath தமது காரில் அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து Scotland Yard அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் Sir Edward Heath கடந்த 2005ம் ஆண்டு காலமானார் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 24 ஜூலை, 2015

நீதிமன்றம் அதிரடி 153 பேருக்கு ஆயுள் தண்டனை???

மியான்மரில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய வழக்கில் சீனாவைச் சேர்ந்த 
 153  பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.மியான்மரில் உள்ளது கச்சின் மாநிலம். சீன எல்லைப்பகுதியை ஒட்டிய இந்த மாநிலத்தில் சீனாவைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக மரம் வெட்டி கடத்துவதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்க அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதத்தில் சோதனை நடத்தியபோது சீனாவைச் சேர்ந்த 153 பேர் மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு மியான்மர் நீதிமன்றத்தில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்ததது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில், சட்டவிரோதமாக மியான்மர் எல்லைக்குள் நுழைந்து மரம் வெட்டிய குற்றத்திற்காக 153 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 20 ஜூலை, 2015

யாழில் கஞ்சா விற்கமுயன்ற இருவர் கைது

யாழ். பருத்தித்துறை பகுதியிலிருந்து யாழ். நகருக்கு கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேக நபர்களை யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கைதுசெய்துள்ளதாக
 யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். இது தொடர்பில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஒரு தொகை கேரளா கஞ்சா பொதியினை கொண்டுவந்து யாழ். நகரில் விற்பனை செய்வதற்காக இருவர் கோட்டை முனியப்பர் கோவிலுக்கு அருகில் காத்து நிற்பதாக இரகசிய 
தகவல் கிடைத்தது. தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் நின்ற இருவரையும் சோதனை செய்தபோது, அவர்களிடம் இருந்து கேரளா கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைதுசெய்ததுடன், அவர்களின் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியதாகவும்; தெரிவித்தார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 16 ஜூன், 2015

புதிதாக யாழ்ப்பாண வணிக வங்கி நிறுவ உத்தேசம்???

யாழ்ப்பாண வங்கி என்ற பெயரில் வணிக வங்கியொன்றை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாங்க் ஒப் ஜப்னா என்னும் பெயரில் இந்த வங்கி இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தகர்கள் சிலர் இந்த வங்கியை அமைப்பது குறித்து மத்திய வங்கியுடன் விண்ணப்பித்துள்ளனர்.
பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்களே இவ்வாறு வங்கி ஆரம்பிக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்
வடக்கு மக்களுக்கு தேவையான வியாபார மற்றும் அபிவிருத்திக் கடன்களை வழங்குவது இந்த வங்கியின் பிரதான நோக்கமாகும்
இலங்கையின் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வணிக வங்கியொன்று ஆரம்பிக்க 500 மில்லியன் பங்கு மூலதனம் இருக்க வேண்டும்.
வங்கிக்கு மத்திய வங்கி அனுமதியளித்தால் எதிர்வரும் மாதங்களில் வங்கியை நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 11 ஜூன், 2015

கொள்ளையர்கள் பெண்ணைத் தாக்கி சங்கிலிஅறுப்பு

  
அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தின போது திருட்டைத் தடுக்க முற்பட்ட பெண் ஒருவர் திருடர்களினால் தாக்கப்பட்டு அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
அளவெட்டிப பகுதியில் உள்ள உயர் அதிகாரி ஒருவரின் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டுக்காரர்கள் விழித்துக் கொண்டு வீட்டின் மின்குமிழ்களைப் ஒளிரவிட்டு சத்தமிட்ட நிலையில் தப்பி ஒடியுள்ளார்கள். அங்கிருந்து தப்பிஓடிய திருடர்கள் இவர்களின் வீட்டுக்கு 
சற்றுத் தள்ளி உள்ள மற்றொரு வீட்டுக்குச் சென்று படுக்கையில் இருந்த பெண் ஒருவரின் சங்கிலியை திருடமுயன்றுள்ளார்கள். நித்திரையில் இருந்து விழித்துக்கொண்ட பெண் சங்கிலியை அறுக்கவிடாது இறுகப்பிடித்த நிலையில் நிலையில் அவரை தாக்கிவிட்டு சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட பெண் சங்கிலியைவிடாது இறுகப் பிடித்தமையால் சங்கிலியின் ஒரு துண்டு அறுக்கப்பட்ட நிலையில் அதை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள். இது சம்பந்தமாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 10 ஜூன், 2015

மீண்டும் பூமியில் போர் சித்தர்களின் குரல்???

சித்தர்களின் தர்ம ஆட்சி மீண்டும் பூமியில் ஏற்படபோர்  மீண்டும் பூமிக்கு திரும்பி வர போகிறார். நம்பிக்கை இல்லையானால் முற்றாக இந்த பதிவை படியுங்கள் . உங்களுக்கே புரியும் 
சிவ சிவ சிவ சிவ நமசிவாய.......

கலியுகமும், சந்திர ரேகையும்!
--------------------------------------------------
சமீபத்தில் எனது புத்தக அலமாரியை
ஒழுங்கு செய்து கொண்டிருந்த
போது...அநேகமாய் அழிந்து விட்ட நிலையில்
இருந்த நூலொன்று கிடைத்தது. புத்தகத்தின்
பெரும் பகுதி அழிந்துவிட்ட நிலையில்
மிச்சமிருந்த நூலின் பாடல்களை சேகரிக்க
முயற்சித்த போது, அது கோரக்க சித்தர்
அருளிய ”சந்திர ரேகை” என்று தெரிந்தது.

என்னிடம் இருக்கும் இந்த புத்தகம் 1826ம்
ஆண்டில் அச்சில் பதிப்பிக்கப் பட்ட நூல்.
இன்றைக்கு அந்த நூல் முழுமையான
வடிவில் கிடைக்கிறதா என தெரியவில்லை.
விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்தால்
பேருதவியாக இருக்கும்.

நாம் வாழ்ந்து வரும் இந்த கலியுகத்தின்
பிறப்பு முதல் கடைசிவரையிலான
நிகழ்வுகளை விவரித்திருக்கிறார். ஒவ்வொரு
கால கட்டத்திலும் என்னென்ன நிகழ்வுகள்
நிகழும் என்பதை என்றைக்கோ கோரக்கர்
தனது நூலில் விவரித்திருப்பது ஆச்சர்யமான
ஒன்று. இந்த நூலில் நான் சேகரித்த சில
பாடல்களையும் அதன் தெளிவுகளையும்
இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து
கொள்கிறேன்.

கலியுகத்தின் தோற்றம்..
--------------------------------------
"யோகி பரமானந்த கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமதபேதம் மெத்த
பாகிதமாய் பிரபலங்கள் பெண்பால்விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட
மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில்
பூவுலகில் கலியினுடை பான்மை கேளே"
- சந்திர ரேகை -

"கேளேநன் மனுக்கள் நூற்றுக் கொன்று
கொடியாகப் பிறந்திருந்தல் அரிதேயாகும்
நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க
நரங்கிடுவர் மனிதர்களும் உயரம் கட்டை
வாளே முன்பின் வயது ஆண்டு நூறு
வழங்கிடுவேன் கலியுதிக்கும் இடத்தை -
தென்பால்
சூளேமெய்க் கம்பல பட்டன் வைணவ தத்தன்
கொல்லை புன்னை மரத்தின் கீழ்ப்பிரமாதி
ஆண்டு
ஆனசித்திரைவெள்ளி நவமிமூலம்
கலிசெனிப்பே"
- சந்திர ரேகை -

பிரமாதி ஆண்டு, சித்திரை மாதம், வெள்ளிக்
கிழமை, நவமி திதியுடன் மூல நட்சத்திரம்
சேர்ந்த நாளில் ”கம்பல பட்டன் வைணவ
தத்தன்” கொல்லையில் புன்னை மரத்தின் கீழ்
யோகி பரமானந்த கலிபுருஷன் பிறந்தான்
என்று சொல்லும் கோரக்கர் மேலும்,
கலியுகத்தின் தன்மை சொல்கிறேன் கேள்
என்று தொடர்கிறார்...

கலியுகத்தில் சாதி மத பேதம் அதிகமாக
இருப்பதுடன், சனத் தொகையில் பெண்களின்
எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்கள்
குறைவாகவும், இருப்பார்கள்...., காமவெறி
அதிகரித்து பெற்ற தாயைப் பெண்டாளும்
மகனும் இருப்பதுடன், நல்லவர்கள் நூற்றுக்கு
ஒருவர் பிறந்திருந்தால் அரிதாக இருக்கும்
என்கிறார். அத்துடன் கலியுகம் வளரவளர
மனிதர்களின் உயரம் குறைந்து கொண்டே
போகும் என்றும் நூறுவயதுக்கு மேல்
வாழ்பவர்கள் மிக அரிதாகிவிடுவர் என்கிறார்.

கலியுகமும், மனிதர்களின் குண நலன்களும்...!
------------------------------------------------------------------------
கலியுகம் துவங்கிய நாள் முதல், இறுதி நாள்
வரையிலான விவரங்களை கோரக்கர் தனது
”சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார்.
கலியுலத்தின் அரசியல், சமூகம், வாழும்
மனிதர்களின் குண நலன்கள் பற்றிய
தகவல்களும் இந்த நூலில் காணக்
கிடைக்கின்றன.

மனிதர்களின் குண நலன்களை பற்றி
பின்வருமாறு கூறுகிறார்.
"சின்னம் மிக ஆகிடுமே செகம் பிறந்து
சீரியதோர் நாகம்போல மாந்தரெல்லாம்
பின்னமுற்றும் பேதமையால் மயக்கம்
கொள்வார்
பிரபலமாம் அரசர்கட்கும் ஆனிமெத்த
இந்நிலத்தில் எங்கெங்கும் சங்கம் கூட்டி
இதமுடனே நிலைநாட்டி ஈசன்தன்னை
நன்னயமாய் வழிபடுவர் நாட்டில் எங்கும்
நற்சமய வாதிகளும் அநேகம் உண்டே "
- சந்திர ரேகை -

உலகமே மாற்றங்களுக்கு உள்ளாகி, மக்கள்
நாகம் போல் சீறிக் கொண்டு, ஏற்றத்தாழ்வு
பேசி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள
முற்படுவர். இந்த நிலத்தில் அரசர்களுக்கு
இடையில் சங்கங்களும் பிரிவினைகளும்
உண்டாகும். ஈசனை வழிபடுபவர்களும்,
நற்சமய வாதிகளும் அதிகம் இருப்பார்கள்
என்கிறார்.

"இன்றியமை யாதொரு இழிகுலத்தோர்
என உரைத்த பறையர்களும் பாக்கியம் பெற்று
நன்றெனவே வையகத்தில் நாளும் ஓங்க
நவிலொண்ணாப் புகழுடனே வாழப்போகும்
குண்றாதோர் முட்டையினில் இரெண்டு
குஞ்சு
செனித்துவிடும் மிருகங்கள் வினோதம்
காட்டும்
அன்றாகும் காலம் அந்தணர் கட்காகா
அறிகுறியாம் இவை எல்லாம் சின்னமாமே"
- சந்திர ரேகை -

இழிகுலத்தோர் என்று கூறப்படும்
தாழ்த்தப்பட்ட மக்கள் பாக்கியம் பெற்றுச்
சிறப்பாக புகழுடன் வையகத்தில் வாழ்வார்கள்
என்கிறார். ஒரு முட்டையில் இரண்டு
குஞ்சுகள் பிறப்பதுடன், மிருகங்களில்
வினோதமான பிறப்புக்கள் உருவாகும் இந்தக்
கலியுகமானது, அந்தண குலத்தவர்களுக்குப்
பாதிப்பை ஏற்படுத்தும். இவைகள் எல்லாமே
கலியுகத்தின் அறிகுறிகளாவதுடன்
சின்னமாகவும் விளங்கும் என்கிறார்.
இத்தகைய கலியுகத்தில், பாரத தேசத்தை
யாரெல்லாம் ஆள்வார்கள் என்றும் கூட
விவரமாய் குறித்திருக்கிறார்.

கலியுகம் - இந்தியாவின் வரலாறு!
------------------------------------------------------
கலியுகம் பிறந்த பின்னர் பாரத நாட்டை யார்
யார் எல்லாம் ஆள்வார்கள், எத்தனை
ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள் என்கிற
விவரங்களைக் கூட கோரக்கர் தனது நூலில்
விளக்கியிருக்கிறார்.

"பழியில்லா பரீட்சித்து ஐந்நூறே ஆண்டான்
பரிவாக சனமேசெயன் முந்நூறாண்டான்
இழிவில்லா நரேந்திரனாம் என்ற மன்னன்
இரண்டு நூற்றெண்பத் தெட்டாக ஆண்டான்
செழிப்பாக சாரங்கன் எண்பத் தைந்து
செகமுழுவதும் விக்கிரமாதித்த வேந்தன்
வேந்தனவன் இரெண்டாயிரம் ஆண்டதப்பால்
வினயமுற்றுச் சாலிவாகனனும் தோன்றிப்
பாந்தமிகு முன்னூற்று நாற்பத்தொன்பது
ஆண்டுஅகிலம் அரசுரிய செங்கோலோச்சி
எந்துகங்குல் நற்போசன் ஐநூ றாண்டான்
சுப்பராயலு அறுநூற்றுத்
தொண்ணூற்றைந்து
போந்தவே கர்த்தாக்கள் எண்பத் தைந்து
பிறைஇசுலாம் அறுபத்து இரெண்டாண்டு"
- சந்திர ரேகை -

"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு
அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
பெருமாவ்யுடன் எழுபத்து மூன்றதாண்டு
பேதமற ஆண்டிடவே இவன் சார்புற்றோன்
கருமையில்ல வெள்ளை நிறமாகத்தானே
கபடுற்று கவர்ந்து தொண்ணுற்றுறாறதாண்டு
வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன்போன்றோர் அரசன்
தோன்றி ஈருறவு நாற்பது வருடமாகும்
துறைதவறா முறைபிசகா திருந்துஓங்கும்
மேன்மை பெற இதுகடந்த நாள்துய்ய
ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்
அகிலசக்கர கொடியுடனே அழியாமல்
பான்மையுடன் அரசாள நான் மட்டல்ல
பகரவில்லை சிவனேந்திரமாமுனியும்
சொன்னார்"
- சந்திர ரேகை -

இந்த பாடல்களின் படி பாரத தேசத்தை ஆட்சி
செய்தவர்களின் பெயரையும்,
ஆண்டுகளையும் பட்டியலிட்டால்......
ஆட்சியாளர்கள் ஆண்டு
பரீட்சித்து
மன்னன் 500
சனமேசெயன் 300
நரேந்திரன் 288
சாரங்கன் 85
விக்கிரமாதித்தன் 2000
சாலிவாகனன் 349
போசனராசன் 500
சுப்பராயலு 695
கர்த்தாக்கள் 85
இஸ்லாமியர் 62
பறட்டையன்
செம்மூஞ்சி
சுக்கன்
73
பறட்டையன்
செம்மூஞ்சி
சுக்கன்
96
பறட்டையன்
செம்மூஞ்சி
சுக்கன்
40
இதன் பின்னர் கிள்ளுநாமக்காரர் கலி
முடியும்வரை ஆட்சி செய்வர் என்கிறார்....
இந்த பட்டியலில்..
"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு
அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்"
73 ஆண்டுகள்

"இவன் சார்புற்றோன்கருமையில்ல வெள்ளை
நிறமாகத்தானே கபடுற்று கவர்ந்து
வறுமைசெய்து ஆண்டபின்" 96 ஆண்டுகள்
"வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன் போன்றோர் அரசன்" 40
ஆண்டுகள்
இவ்வாறு குறிக்கப்படும் ஆட்சிக்காலம்
ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலமாகக்
கொள்ளலாம், மொத்தமாக 209 ஆண்டுகள்
என்று கோரக்கர் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை எறத்தாழ

200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டமை
எல்லொருக்கும் தெரிந்ததே..கோரக்கர்
கூறியுள்ள கணக்கின் படி இந்தியா சுதந்திரம்
அடைந்த போது கலியுகத்தின் வயது 5073
ஆண்டுகளாகும்.

கடைசியாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குப்
பின்னர் "ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்
அகிலசக்கர கொடியுடனே அழியாமல்
பான்மையுடன் அரசாள" என்று
குறிப்பிட்டுள்ளார். இங்கே "ஆன்மநலம்
அறிந்த கிள்ளுநாமக்காரர்" என்பது அநேகமாய்
மகாத்மா காந்தியையும் "அகிலசக்கர
கொடியுடனே" என்பதை அசோகச்சக்கரம்
பொறித்த இந்தியக் கொடி என்பதாக
அனுமானிக்கலாம்.

இந்தச் எதிர்வு கூறல்களை தான்
மட்டுமல்லாது சிவனேந்திரமாமுனியும்
சொல்லியுள்ளார் என்று கோரக்கர்
குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆக பல
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள்
இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் முதல்,
சுதந்திரம் பெற்ற இந்தியாவை மகாத்மா
காந்தியும், அவர் வழியில் வந்தவர்களும்
அதாவது சனநாயக ஆட்சி முறையில் ஆள்வர்
என்று எதிர்வு கூறியிருப்பது ஆச்சர்யமான
செய்தி!

போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள் !
-----------------------------------------------------------
பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில்
ஜீவ சமாதியாகி இருப்பவருமான ”போகநாதர்”
பூமிக்கு மீண்டும் வருவதாக
கூறியிருப்பதாகவும், எத்தகைய
சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு
திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர்
தனது “சந்திரரேகை” நூலில்
விவரித்திருக்கிறார்.

"தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்"
- சந்திர ரேகை

பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள்
விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும்,
போர்களாலும் மக்கள் பெரும் அளவில்
மாண்டுபோவார்கள், இதனால் பெரும்
பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும்.
கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து
தெய்வ அருள் குறைவடையும் கால
கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி
விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி
கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக
நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில்
பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி
(கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம்
ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன்
பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும்
என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச்
செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.

இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு
என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின்
இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில்
நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.
இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும்
பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை
கிடைக்கும்.கோரக்கர் மட்டுமல்லாது
அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர
மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள்
போன்றோரும் இம்மாதிரியான ”எதிர்
கூறல்களை” கூறியுள்ளதாகக் குறிப்புகள்
காணக் கிடைக்கின்றன. குருவருளால் அவை
பற்றிய தகவல்கள் கிட்டும் போது பகிர்ந்து
கொள்கிறேன்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 8 ஜூன், 2015

பஸ் மோதி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை மதவடியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலையில் காக்கைதீவு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவிட்டு அதிகாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை சாவற்காட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளியான எஸ்.நாதன் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்தவராவார்.
பஸ் மோதியதில் இவர் அருகில் உள்ள மதவினுள் தூக்கி எறியப்பட்டார் எனவும், மோதிய பஸ் அந்த இடத்தில் இருந்து தப்பி ஒடியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சிக்கியவர் பொதுமக்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக சடலம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வாள்வெட்டுக்கு நால்வர் படுகாயம்! - தொடரும் அராஜகம்


துன்னாலை குடவத்தைப் பகுதியில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் பாரிய வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களவாக மணல் ஏற்றப்படுகின்றமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கி வருகின்றார் என தெரிவித்து இளைஞர் ஒருவரை அதேபகுதியைச் சேர்ந்த கும்பல் ஒன்று நடுவீதியில் வழிமறித்து சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகியது.
இச்சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் போலியோ நோயினால் கால் பாதிக்கப்பட்ட இளைஞரான துரைசிங்கம் பிரபு ( வயது 29) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி கை , கால், மணிக்கட்டு பகுதியில் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு குறித்த இளைஞரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்படும் பொன்னையா 
என்பவரின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த கும்பலொன்று வீட்டின் கதவை உடைத்து உள்சென்று அங்கிருந்த இருபெண்கள் மீதும் வாள்வீச்சு நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் பருத்தித்துறை ஆதாரா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணிநேரத்திற்குள் மேலும் ஒரு இளைஞர் வாள்வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று மாலை வாள்வெட்டிற்கு இலக்கானவரின் மைத்துநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 21 மே, 2015

ரயில் நிலையம் அருகில் சிசு ஒன்று மீட்பு

கிளிநொச்சி ரயில் நிலையம் அருகில் இருந்து பெண் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் வீதியால் சென்ற பொதுமக்கள் அழுகுரல் கேட்ட திசையை நோக்கிச் சென்று சென்று பார்த்தபோது
அங்கே பெண் சிசு ஒன்று அநாதரவான நிலையில் காணப்பட்டுள்ளது. சிசுவைக் கண்டெடுத்த அவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கையளித்தனர். பொலிஸார் அந்த சிசுவை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 16 மே, 2015

உதைபந்தாட்ட ஹாட்லி, உடுப்பிட்டி இறுதிப் பலப்பரீட்சை

பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற அரை இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றன உடுப்பிட்டி அ.மி. கல்லூரி மற்றும்
                                                 பருத்தித்துறை ஹாட்லிக்  கல்லூரி.
வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டத் தொடரின் 19 வயதுப் பிரிவினருக்கான ஆட்டங்கள் நேற்று இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியும், நெல்லியடி மத்திய கல்லூரியும் மோதின. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதற்பாதி ஆட்டத்தில் இரு அணியினருக்கும் கோல் போடுவதற்கான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவர்கள் அதனை தவற விட, ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியினரும் எந்தவித கோல்களையும் பெறாது சமநிலை வகித்தனர்.
இடைவேளையின் பின் இரு அணியினரும் சில மாற்றங்களுடன் அதிரடி வியூகங்களை வகுத்து களமிறங்க மைதானத்தில் இரு அணி ஆட்டத்திலும் அனல் பறந்தது. இதனால் பந்து இரு பகுதி கோல் பகுதியையும் மாறி மாறி ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது.
ஆட்டத்தின் 17, 19 ஆவது நிமிடங்களில் ஹாட்லிக் கல்லூரி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தின் சம நிலைத்தன்மையை மாற்றி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். முடிவில் ஹாட்லிக் கல்லூரி 2:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதிபெற்றது.
இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அ.மி. கல்லூரியும் வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரியும் மோதின. இதில் 3:0 என்ற கோல் கணக்கில் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 14 மே, 2015

இன்று கொலை குற்றவழிகளுக்கு மரண தண்டனை---

கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூவருக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டு கொழும்பு கிரான்ட்பாஸில் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று நபர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எதிராக வழக்கறிஞர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட கால விசாரணைக்குப் பின்னர் வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு உயர்நீதிமன்ற நீதவான் பத்மினி ரணவக்க குணதிலக்க தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 30 ஏப்ரல், 2015

கதவில் சிசுவை தொங்கவிட்டு சென்ற கொடூர தாய்!

பிறந்து மூன்றே நாளான குழந்தையொன்றை துணிப்பையொன்றிற்குள் வைத்து சிறுவர் காப்பகம் ஒன்றின் வாசற் கதவில் தொங்கவிட்டுச் சென்ற சம்பவம் அநுராதபுரத்தில்
 நடந்துள்ளது. நேற்று இந்த குழந்தை மீட்கப்பட்டது.
காப்பக ஊழியர் ஒருவர் கண்டதின் பலனாக மீட்கப்பட்ட குழந்தை அநுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் அதேவேளை குழந்தையின் 
தாயைத் தேடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.sesu
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>