சனி, 19 டிசம்பர், 2015

பல காணிகள் இராணுவ கட்டுபாட்டில் இருந்து விரைவில் விடுவிக்கப்படும் ?

வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி தமது தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதனால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மீள்குடியேற்றபடாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் :
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 11 டிசம்பர், 2015

தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் கிர்ணிப் பழம்

அழகை தலை முதல் பாதம் வரை பாதுகாக்கும் அற்புதக் கவசம் கிர்ணிப் பழத்திற்கு(மிலோணன் ) உண்டு.இந்த பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால் கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் அள்ளித் தருவதில் வள்ளலாக இருக்கிறது.

*ஐம்பது வயதுக்கு மேல் தோலில் எண்ணெய்ப் பசை குறைந்து, வறண்டு போய்விடும். இவர்கள் பியூட்டி பார்லரில் வேக்சிங் அல்லது திரெடிங் போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும். இதற்கு கிர்ணிப்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ் இரண் டையும் சம அளவு கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.

*நூறு கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் – தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாவதோடு முடியின்
 பளபளப்பும் கூடும்.
*கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் இரண்டையும் சம அளவு எடுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு வெள்ளரி ஜூஸ் சேர்த்து தலை முடி முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். இது எண்ணெய் தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
*ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிர்ணி விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>