புதன், 30 ஏப்ரல், 2014

வடபகுதிக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

குருநாகல், பொத்துஹெர பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, வடபகுதிக்கான தூர ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து வவுனியா, பளை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும்  மற்றும் மேற்படி பகுதிகளிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ரயில் சேவைகள் நாளை இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சனி, 26 ஏப்ரல், 2014

அதிசயம் இரு உடலில் ஒரு இதயம்

 ஆந்திர மாநிலத்தில் ஒரே இதயத்துடன் இரண்டு குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான மாரவள்ளி ஏர்ரய்யா – நூகாலம்மா என்ற தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்தன.
குழந்தையின் கழுத்து முதல் மார்பு பகுதி வரை ஒன்றாக ஒட்டி உள்ளன. 2 குழந்தைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இதயமே உள்ளது.
இந்த குழந்தைகள் உடனடியாக அங்குள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு வைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நூகாலம்மாவுக்கு ஏற்கனவே 2 முறை பிரசவம் நடந்த 2 குழந்தைகளும் இறந்து விட்டனர். இது 3வது பிரசவம் ஆகும். இந்த முறை குழந்தைகள் இப்படி பிறந்துள்ளதால் பெற்றோர் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.
 

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

பிறந்தநாள் வாழ்த்து ராஜசசேகரம் மதுசன்.25.04.2014.

 
தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில்வசிக்கும்
ராஜசசேகரம் மதுசனின் பிறந்த நாள் இன்று.25.04.2014.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது  இல்லத்தில் வெகுவிமர்சையாகஇன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் தேவன் குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்{காணொளி ]


 

........

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் .21.04.14,


மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் ஓய்வு பெற்ற இ.போ.ச சாரதி யாழ்ப்பாணம்​. அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் கொண்ட தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21:04:2014 அன்று காலமானார் இவரின் இறுதிக்கிரி​கையின் விபரம் பின்னர் அறிவிக்கப்ப​டும்.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

வெளிநாடு செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் 21.4 வீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளுக்கு தொழில் பெற்று செல்லும் பெண்களின் எண்ணிக்கை 14.6 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. வருடாந்தம் 40.6 வீதமானவர்கள் வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்று செல்கின்றனர்.

சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

5 வயதுக்கும் குறைவான வயதுடைய பிள்ளைகள் இருக்கும் பெண்கள் வெளிநாட்டுக்கு செல்வதை தவிர்த்து கொண்டமையும் இதற்கு ஒரு காரணமாகும்.

2012 ஆம் ஆண்டு 42.1 வீதமான பெண்கள் வெளிநாடுகளுக்கு வீட்டுப் பெண்களாக சென்றிருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த வருடம் 33.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

98 வீதமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளதுடன் அவர்களில் 71 வீதமானவர்கள் சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர்.

திங்கள், 14 ஏப்ரல், 2014

யாழ் கிணற்றில் இளம் பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருநகர் அடப்பன்றோட்டை சேர்ந்த ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும் குறித்த மரணம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சனி, 12 ஏப்ரல், 2014

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல ஆலோசனை

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு விரைவில் மன நல ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.மனநல ஆலோசனைகளை வழங்குவது மிகவும் அவசியமானது என ஜனதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

யுத்த வலய மக்கள் எதிர்நோக்கக் கூடிய உளவியல் பிரச்சினைகள் மற்றும் ஏனைய அழுத்தங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூக சேவைகள், மகளிர் விவகாரம், சுகாதாரம் போன்ற பல்வேறு அமைச்சுக்களினால் இந்த ஆலோசனை சேவைகள் நடத்தப்படுகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வாறான ஓர் பொறிமுறைமையின் கீழ் மன நல ஆலோசனைகளை வழங்குவது என்பது குறித்து அண்மையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

அந்தியேட்டி அழைப்பிதழ்அமரர் திரு நடராசா அற்புதராசா

 தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
  அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு நடராசா அற்புதராசா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் எதிர்வரும்.07.04.2014.திங்கட்கிழமை அனைவரைவும் இதில்கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம் தகவல் மனைவி பிள்ளைகள்.. அன்னாரின் ஆத்மாசாந்தி அடய இறைவனைப்பிராத்திப்போமாக ஓம்சாந்தி!சாந்தி!!சாந்தி!!!

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் திருவிழா

                        
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளை யார் ஆலய திருவிழா உற்சவங்கள்.பத்தர்கள் படை சூழ ,மிகவும் சிறப்பபாக நடை பெற்றது 03mr.04ap.2014.அதன், {,புகைப்படங்கள், இணைப்பு},,,