வியாழன், 30 அக்டோபர், 2014

மஹிந்தவின் பேருந்துகள் இரண்டு மீது தாக்குதல்!

 வன்னியில்  மஹிந்தவினால் வழங்கப்பட்ட பேருந்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்ற நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மேலும் இருவேறு பேருந்துகளுக்கு இனந்தெரியாத நபர்களினால் நேற்று புதன்கிழமை (29) இரவு கல்வீச்சு தாக்குதல்கள்; மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மற்றும் முல்லைத்தீவு தண்ணீறூற்று பகுதிகளில் வைத்து இத்தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு வழியாக கொழும்பு சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்; பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன. கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றுக்கும்; நேற்றிரவு இரவு தண்ணீரூற்று பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கற்பிட்டி இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துக்கே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவை நோக்கி பேருந்தைச் செலுத்தி வரும்போது தண்ணீரூற்று பிரதேசத்தில் வைத்து இரு உந்துருளியில் வந்தவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 25 அக்டோபர், 2014

முன்பள்ளிக்குச் சென்ற ஆறு வயது சிறுவன் சடலமாக மீட்பு

 யாழில் ஆறு வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கிரேசியன் (வயது 6) என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.
குறித்த சிறுவன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள முன்பள்ளிக்குச் சென்றுள்ளார். 12 மணியான போதும் பிள்ளையை காணவில்லை என பெற்றோர்கள் இளவாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரம் பல பகுதிகளில் தேடிய பின்னர் முன்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள கிணற்றில் சிறுவன் சடலமாக மிதந்துள்ளார்.
தற்போது, சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 22 அக்டோபர், 2014

இராணுவம்! துரத்தி துரத்தி வீதியெங்கும் வாழ்த்து கூறுகின்றனர்??

யாழ்.குடாநாட்டு மக்களிற்கு இலங்கை இராணுவம் வீதியெங்கும் துரத்தி துரத்தித் தீபாவளி வாழ்த்து கூறி வருகின்றது. வீதியில் ரோந்து செல்லும் படைப்பிரிவுகள் ஒருபுறமும் மற்றைய புறம் வீடுவீடாக செல்லும் படையினர் இன்னொருபுறமும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மற்றும் இராணுவத்தினரின் தீபாவளி வாழ்த்து என அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளையே இவ்வாறு வழங்கி வருகின்றனர். யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் பரவலாக கடந்த மூன்று நாட்களாக இராணுவத்தினர் அமோகமாக வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
அத்துடன் தீபாவளியை முன்னிட்டு படையினர் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்வுகளையும் நடத்தவிருப்பதாகவும் அழைப்பிதழ்களினில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளிற்காகவே வீடு வருவதாக அச்சங்கொண்டு மக்கள் முடங்கிவருகின்றனர். மக்களது மனம் கவரும் நோக்கினிலேயே இம்முயற்சி நடப்பதாக கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 20 அக்டோபர், 2014

பருத்திதுறையிலிருந்து கொக்கிளாய்க்கான நேரடி பஸ் சேவை

பருத்திதுறையிலிருந்து  கொக்கிளாய்க்கான நேரடி பஸ் சேவை 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது பஸ் சேவை இன்று அதிகாலை 5.15 க்கு ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி தெரிவிக்கின்றார்.
அதற்கமைய தினந்தோறும் அதிகாலை 5.15 க்கும் காலை 10.30 க்கும் இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைக் காரணமாக பருத்திதுறையிலிருந்து முல்லைத்தீவுக்கான பஸ் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்ததாகவும் பருத்திதுறை சாலை முகாமையாளர் கூறினார்.
பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குடாநாட்டு மக்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொள்ளவதை கருத்திற் கொண்டு நேரடி பஸ் சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும் பருத்திதுறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி  சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, முல்லைத்தீவு கொக்கிலாய் பஸ் நிலையத்திலிருந்து பருத்திதுறைக்கான நேரடி பஸ் சேவை பிற்பகல் ஒரு மணிக்கும் மாலை நான்கு மணிக்கும் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 16 அக்டோபர், 2014

சிறைக்கைதி ஒருவர் மரத்தில் இருந்து விழுந்து மரணம்!

 மட்டக்களப்பில் சிறைக்கைதி ஒருவர் மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
நீதிமன்ற வளாகத்திலுள்ள மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று மாலை 3.20 அளவில் குறித்த கைதி, வழுக்கி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
விழுந்ததில் படுகாயமடைந்த கைதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 அக்டோபர், 2014

சிறைக்கைதிகளுக்கு இன்று முதல் தொலைப்பேசி!

சிறைக்கைதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொலைப்பேசி மத்திய நிலையாம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் திறந்துவைக்கப்படவுள்ளது.
சமூகத்துடனும் குடும்பத்துடனுமான சிறைக்கைதிகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் சிறைச்சாலைகள் வரலாற்றில் முதற்தடவையாக தொலைபேசி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரசேன பல்லேகமவின் தமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால்  திறந்து வைக்கப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 11 அக்டோபர், 2014

இலங்கையை ஹெலிகொப்டரில் சுற்றிப் பார்க்கலாம்

இனி இலங்கையை ஹெலிகொப்டரில் சுற்றிப் பார்க்கலாம்
சிவில் ஹெலிகொப்டர் சேவையொன்றை அடுத்த வாரத்துக்குள் ஆரம்பிப்பதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரையறுக்கப்பட்ட ஐ.டபிள்யு.எஸ். எவ்யேஷன் தனியார் கம்பனிக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த கம்பனியின் தலைவர் ஐ.டபிள்யு. சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா, உள்நாட்டு விஜயம், வானியல் ஆய்வுகள், ஆகாயத்திலிருந்து புகைப்படம் எடுத்தல், திரைப்படம் தயாரிப்பு, சிவில் விமான நிலையங்களுக்கிடையிலான சேவை, விளையாட்டு மற்றும் செய்தி பெறுவதற்கான அவசர கள விஜயங்கள் என்பவற்றுக்கு இந்த குளிரூட்டப்பட்ட ஹெலிகொப்டர் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இரத்மலான விமான நிலையத்திலிருந்து இந்த சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அக் கம்பனியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 4 அக்டோபர், 2014

புங்கன்குளம் பகுதியில் காணியில் கைக்குண்டு மீட்பு!

டெங்கு பரவலை தடுக்க துப்பரவு பணியினை மேற்கொண்ட போது, வீட்டு காணியில் இருந்து பழைய கைக்குண்டு ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். புங்கன்குளம் புகையிரத பாதைக்கு அண்மையில் உள்ள வீட்டு காணியினை வீட்டு பராமரிப்பவர்கள் புதன்கிழமை துப்பரவு பணியினை மேற்கொண்ட போது, கிளிப் கழற்றப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று இருந்துள்ளது.
வீட்டு பராமரிப்பாளர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து, இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் குண்டை செயலிழக்க வைத்துள்ளனர்
 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 3 அக்டோபர், 2014

புதையல் தோண்டிய மூவர் கைது

வவுனியா, மாமடுவ வாவி பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் இன்று  அதிகாலை மாமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, போகஸ்வெவ வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அநுராதபுரம், கல்கிரியாகம மற்றும் கெக்கிராவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து பூஜை பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>