வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

கிணற்று நீரைப் பயன்படுத்த வேண்டாம் சுகாதாரப் பகுதியினர் அறிவிப்பு

மானிப்பாய் வலி.தென்மேற்குப் பகுதிகளில் இயங்கி வரும் வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்களின் உற்பத்திகளுக்கு கிணற்று நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.
வலி.தென்மேற்குப் பிரதே சத்தில் ஒரு சில கிணறுகளில் காணப்பட்டு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கழிவு ஒயில் தன்மை நாளுக்கு நாள் ஏனைய கிணறுகளுக்கும் பரவியுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதிகளில் இயங்கி வரும் வெதுப்பகங்களையும், உணவகங்களையும் கிணற்று நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ள
 சுகாதாரப் பகுதியினர் அப்பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கும் குடிதண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
வலி.தென்மேற்குப் பிரதே சத்தில் சுதுமலை, மானிப்பாய் மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் ஆகிய இடங்களிலுள்ள சில கிணறுகளில் கழிவு ஒயில் கலந்திருப்பதாக மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து ஒரு சில கிணறுகள் சுகாதாரப் பகுதியினரால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது சுதுமலை வடக்கு, மாசியப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
�தற்பொழுது மேற்படி இடங் களிலுள்ள 28 இற்கும் அதிகமான கிணறுகளில் ஒயில் கலந்திருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதையடுத்து சுதுமலை வடக்கு, மாசியப்பிட்டி ஆகிய இடங்களில் நான்கு தண்ணீர்த் தாங்கிகள் வைத்து பிரதேச சபையினரால் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கழிவு ஒயிலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இயங்கி வரும் வெதுப்பகங்களையும், உணவு கையாளும் நிலையங்களையும் கிணற்று நீரைப் பாவிக்க வேண்டாம் என்று அறிவித்துள்ள சுகாதாரப் பகுதியினர் இப்பகுதியிலுள்ள மூன்று பாடசாலைகளுக்கும் குடிதண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை கழிவு ஒயில் பீதியினால் பிரதேச சபையினால் தண்ணீர் வழங்கப்படாத இடங்களில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் தற்பொழுது போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரைப் பாவித்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 11 பிப்ரவரி, 2015

நவரத்தினராசா கௌசிகன் என்ற மாணவனை காணவில்லை!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 2014 க.பொ.த.சா.தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருக்கும் மாணவனை நேற்று முன்தினம் இரவு .09.02.15.தொடக்கம் காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி விவேகானந்த நகர் மேற்கை சேர்ந்த நவரத்தினராசா கௌசிகன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ் இலக்கத்துடன் அல்லது அருகிலுள்ள காவல்துறை நிலையங்களில் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு – 0776231011 !
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

குடாநாட்டில் கடும் மழை பெய்துள்ளது

 யாழ். குடாநாட்டில் புதன்கிழமை (04.02.2015) காலை 07 மணியிலிருந்து ஆரம்பித்த கடும் மழை பிற்பகல் 02 மணி வரை நீடித்தது.

இதனால் தோட்டங்களிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் மழை வெள்ளம் தேங்கிக் காணப்பட்டது.
கடந்த பல நாட்களாக வெயிலுடனான காலநிலை நீடித்த நிலையில் திடீரென மழை பெய்துள்ளது.
தற்போதும் மப்பும் மந்தராமுமான காலநிலையே நீடிக்கிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>