வெள்ளி, 24 ஜூலை, 2015

நீதிமன்றம் அதிரடி 153 பேருக்கு ஆயுள் தண்டனை???

மியான்மரில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய வழக்கில் சீனாவைச் சேர்ந்த 
 153  பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.மியான்மரில் உள்ளது கச்சின் மாநிலம். சீன எல்லைப்பகுதியை ஒட்டிய இந்த மாநிலத்தில் சீனாவைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக மரம் வெட்டி கடத்துவதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்க அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதத்தில் சோதனை நடத்தியபோது சீனாவைச் சேர்ந்த 153 பேர் மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு மியான்மர் நீதிமன்றத்தில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்ததது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில், சட்டவிரோதமாக மியான்மர் எல்லைக்குள் நுழைந்து மரம் வெட்டிய குற்றத்திற்காக 153 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 20 ஜூலை, 2015

யாழில் கஞ்சா விற்கமுயன்ற இருவர் கைது

யாழ். பருத்தித்துறை பகுதியிலிருந்து யாழ். நகருக்கு கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேக நபர்களை யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கைதுசெய்துள்ளதாக
 யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். இது தொடர்பில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஒரு தொகை கேரளா கஞ்சா பொதியினை கொண்டுவந்து யாழ். நகரில் விற்பனை செய்வதற்காக இருவர் கோட்டை முனியப்பர் கோவிலுக்கு அருகில் காத்து நிற்பதாக இரகசிய 
தகவல் கிடைத்தது. தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் நின்ற இருவரையும் சோதனை செய்தபோது, அவர்களிடம் இருந்து கேரளா கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைதுசெய்ததுடன், அவர்களின் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியதாகவும்; தெரிவித்தார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>