ஞாயிறு, 30 மார்ச், 2014

ஜப்பானில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர்

ஜப்பானில் இன்று காலை ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் பலியாகினர். 2 பேரை காணவில்லை. இதுகுறித்து ஜப்பானிய கடற்படையினர். கூறியுள்ளதாவது:-
ஜப்பானின் தெற்கு டோக்க்கியோவில் 1,700 கிலோமீட்ட தொலைவில் உள்ள தீவு ஒன்றில் பாலம் அமைக்கு பணி நடந்து வந்தது. கட்டுமான பணியின் போது இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் 5 பேர் பலியாகினர். 2 பேரை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் 16 பேர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் இதில் 9 பேர் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

சனி, 8 மார்ச், 2014

மரண அறிவித்தல் திரு நடராசா அற்புதராசா

                        தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா அற்புதராசா அவர்கள் 08-03-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சிந்துஜா(சுவிஸ்), இந்துசன்(சுவிஸ்), இந்துசா(கனடா), செந்துஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சந்திரமதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காசிநாதன், சொருபா, ஶ்ரீராம், ஜெகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபினா, பிரசின், ஆருஷா, சுயின், சுயிபன், சுயிந்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
- இலங்கை
தொலைபேசி: +94213734438
செல்லிடப்பேசி: +94777152489
 

வெள்ளி, 7 மார்ச், 2014

பளைக்கான சொகுசு ரயில் 2.45க்கு பயணமாகும்


புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பளைக்கான குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவை இன்று பிற்பகல் 2.45 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது

திங்கள், 3 மார்ச், 2014

கைதுஆசிரியை தொலைபேசியில் தொந்தரவு செய்தவர்

யாழ். அச்சுவேலி பத்தமேனியினைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை கடந்த இரண்டு மாதங்களாக தொலைபேசியில்; தொந்தரவு செய்ததுடன், ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை குறித்த ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று அடாவடி செய்த புத்தூர் நவக்கிரியினைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர் குறித்த ஆசிரியையை கடந்த இரண்டு மாதங்களாக காதல் செய்யும்படி தொலைபேசியில் தொந்தரவு செய்து வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த நபரின் தொந்தரவு தாங்க முடியாமல் ஆசிரியை குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்பு வருவதினை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உதவியுடன் நிறுத்தியுள்ளார்.

தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்த அந்நபர், இன்று (02) அதிகாலை 12.30 மணியளவில் குறித்த ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியையின் தந்தை அந்நபரினை பிடித்து அடித்ததுடன், அச்சுவேலிப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியதையடுத்து கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர். குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சனி, 1 மார்ச், 2014

கே எஸ் பாலச்சந்திரன் தொலைக்காட்சி நிகழ்வின்

தனது கலைவடிவங்களை
தாராளமாக அள்ளித்தந்து
துள்ளிச்சிரிக்கவைத்த
இயல்போடு ஒன்றிய நகைச்சுவைப்பதிவு

கேஎஸ் பாலச்சந்திரன் அவர்களின்

நினைவுசுமந்து நிற்கிற கானொளிப்பதிவு