ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வீதிக்கட்டுப்பாடு நவற்கிரி கோர விபத்தினை அடுத்து !!

  யாழ்.குடாநாட்டின் சிறு வீதிகளின் ஊடாக கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட விரைவில் தடை விதிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவுள்ளது.யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் :-
அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துச் செல்கின்றது இதனால் உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றன. இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரினால் விசேட வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக  நவக்கிரி  புத்தூர்ரில் வியாழக்கிழமை 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் மகேஸ்வரி நிதியத்துக்குச் சொந்தமான டிப்பரால் மோதிக் கொல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த வீதியில் குறித்த டிப்பர் வாகனம் செல்ல முடியாதவாறு நிலத்தின் தன்மை, அகலம் காணப்பட்டபோதும் டிப்பர் வாகனம் பயணித்துள்ளது. இவ் வீதி உட்பட யாழ். குடாநாட்டில் உள்ள சிறு வீதிகளில் செல்லக்கூடிய அல்லது செல்ல அனுமதிக்கக்கூடியதான நிலத்தின் தாங்குதிறன், வீதியின் அகலம் என்பனவற்றைக் குறிப்பிட்டுப் பாரவூர்திகள் செல்ல அனுமதிக்கப்படும் வகைகள் தொடர்பில் அறிவித்தல் பலகை போடப்பட்டிருக்கவில்லை.

அந்த அறிவித்தல் வீதியில் போடப்பட்டிருந்தால் அவ்வாறான விபத்துகளைத் தடுக்க முடியும் என்று கூறப்பட்டது.

இதனடிப்படையிலேயே சிறு வீதிகள் மற்றும் ஒழுங்ககைள் ஊடாக கனரக வாகனங்கள் பயணிப்பது தடைசெய்யப்படவுள்ளது. இதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இது குறித்த எச்சரிக்கைப் பலகைகள் உரிய வீதிகளில் நடப்படவுள்ளதாக தெரிவித்தார்.
... இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

துரையப்பா அரங்கு அடிக்கல் நாட்டப்பட்டது.!


யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தை, சர்வதேச அரங்காகப் புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு 27.08.14.முற்பகல் 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், இந்தியத் துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, , கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விளையாட்டு அரங்குக்கான அடிக்கல்லை நட்டுவைத்தனர். இலங்கை - இந்திய நட்புறவின் கீழ், இந்திய அரசாங்கமும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து 145 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை புனரமைப்பு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
.
adikkal adikkal0

சனி, 23 ஆகஸ்ட், 2014

தாலிகட்டியதும் மனைவியை பிரிந்தார் கடல் கடந்து காதல் வென்றது:

 இலங்கை வாலிபர்  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனிசிறப்பு முகாமில் இந்தியாவில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வங்காள தேசத்தை சேர்ந்த 6 பேர், நைஜீரியர்கள் 6 பேர், 22 இலங்கை வாழ் தமிழர்கள் உள்பட 34 பேர் 1946 மத்திய தடை சட்டம் 31–ன் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கையை சேர்ந்த செல்வராஜா என்பவரின் மகன் கிருஷ்ணலிங்கம்(வயது 35) என்பவரும் உள்ளார். இவர் கடந்த 2009–ம் ஆண்டு 5 வழக்குகளில் செங்கல்பட்டு தனிசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு தற்போது செய்யாறு தனிசிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணலிங்கம், இலங்கையில் உள்ள அவருடைய மாமன் மோகனவேல் என்பவரின் மகள் வசந்தமலர் (32) என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். வசந்தமலரை திருமணம் செய்ய அனுமதி அளிக்குமாறு தமிழக அரசிடம் கிருஷ்ணலிங்கம் மனு செய்திருந்தார். இதற்கு அரசு அனுமதி அளித்தது.
அதனை தொடர்ந்து வசந்தமலர் மற்றும் உறவினர்கள் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டிற்கு வந்து சென்னையில் தங்கினார். நேற்று செய்யாறு தனிசிறப்பு முகாமில் உள்ள கிருஷ்ணலிங்கத்தை அரசின் அனுமதியுடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
அங்கு வசந்தமலர் மணக்கோலத்தில் காத்திருந்தார். கிருஷ்ணலிங்கம் வந்ததும் உறவினர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
வசந்தமலர் கழுத்தில், கிருஷ்ணலிங்கம் உறவினர்கள் முன்னிலையில் தாலி கட்டினார். தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து 1 மணிநேரத்தில் மீண்டும் கிருஷ்ணலிங்கம் தனிசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பின்னர் மணமகள் மற்றும் உறவினர்கள் சென்னை பல்லாவரத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
தாலிகட்டியவுடன் பிரிந்தாலும் காதலில் வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க தம்பதி பிரிந்து சென்ற காட்சி உருக்கமாக இருந்தது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .