வியாழன், 31 ஜூலை, 2014

குறைந்த விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட் பேண்ட் (காணொளி )

 
Razer நிறுவனம் தனது Razer Nabu எனும் புதிய ஸ்மார்ட் பேண்ட்டினை எதிர்வரும் இரு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.
முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இதன் விலை 100 டொலர்கள் என Razer நிறுவனத்தின் தலைமை அதிகாரி Min-Liang Tan தெரிவித்துள்ளார்.
Android மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய இச்சாதனத்தில் Twitter, Google Maps, Instagram மற்றும் Facebook அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.
128 x 32 Pixel Resoluton உடையதும் OLED தொழில்நுட்பத்தினை உடையதுமான திரையினைக் கொண்டுள்ளது.
இதிலுள்ள மின்கலமானது ஒருமுறை சார்ஜ் செய்த பின்னர் 5 தொடக்கம் 7 நாட்கள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

மற்றைய செய்திகள்

திங்கள், 28 ஜூலை, 2014

தற்பரன் அவர்களின் 31வது நாள் நனைவையொட்டி நடத்தப்பட்ட

அமரர் சுப்பிரமணியம் தற்பரன் அவர்களின் 31வது நாள் நனைவையொட்டி நடத்தப்பட்ட துடுப்பாட்ட இறுதியாட்டத்தில் அச்சுவேலிகதிரொளி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நவற்கிரி எல்லாளன் வி.கழகம் மோதிக்கொண்டது அதில் கதிரொளிவி.கழகம் 31ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக்கொண்டது இதில் தொடர் நாயகனும்.அதிககூடிய ஓட்டத்தையும் விதுசன் பெற்றுக்கொண்டார் இறுதியாட்டத்தின் ஆட்டநாயகனாக கதிரொளிவி.கழகவீரராக மதுசன் தெரிவுசெய்யப்பட்டார்



 
மற்றைய செய்திகள்

திங்கள், 21 ஜூலை, 2014

இராச வீதி அச்சுவேலியில் பதற்றம்

அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
மேற்படி பகுதியில் 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 53 பரப்புத் தோட்டக் காணிகள் கடந்த ஜுன் 2ஆம் திகதி நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீடு செய்ய முற்பட்ட போது, அதனை பொதுமக்கள் போராட்டம் நடத்தித் தடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை (21) பொலிஸாரின் பாதுகாப்புடன் மீண்டும் காணிகளை அளவீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அங்கு கூடிய பொதுமக்கள், வடமாகாண சபை அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அங்கு வந்த அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, இந்தக் காணிச் சுவீகரிப்பிற்கு எதிராக தாங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவ்வாறானதொரு நிலையில், இந்த காணிகளை அளவீடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் கூறினர்.
அதற்கு பொறுப்பதிகாரி, நீதிமன்ற உத்தரவினை கையளிக்கும்படி கோரியுள்ளார்.  நீதிமன்ற வழக்கு இலக்கம் மட்டுமே உள்ளது, நீதிமன்ற உத்தரவு இன்னமும் கிடைக்கப்பெறவில்லையென பொதுமக்கள் பதில் கூறினார்கள்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காணி அளவீடு செய்வதினைத் தடை செய்ய முடியாது. நாங்கள் காணி அளவீடு செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
எங்களைக் கைது செய்த பின்னரே நீங்கள் காணிகளை அளவீடு செய்ய முடியும் என பொதுமக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர், நிலஅளவையாளர்கள் வந்த வாகனத்தினை சுற்றி அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் ஆகியோரும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்

மற்றைய செய்திகள்

சனி, 5 ஜூலை, 2014

வைத்தியசாலைக்குள் வாள் வெட்டு;

 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயார் பிரிவிற்குள் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.

அல்லாரைப்பகுதியில் இரண்டு குழுக்களுக்குள் இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

அதனையடுத்து குறித்த குழுவினர் வைத்தியசாலைக்குள் வந்து மீண்டும் தகராற்றில் ஈடுபட்டனர். இதனையடுத்த மீண்டும் வாள் வெட்டு இடம்பெற்றது. இதில் 8பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அதன்போது அல்லாரையை சேர்ந்த 25வயதுடைய அன்பழகன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் வழியில். உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றமையால் வைத்தியசாலையினர் பீதியில் உறைந்துள்ளதுடன் வைத்தியசாலை சூழல் பதட்டநிலையிலும் உள்ளது. தற்போது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றைய செய்திகள்

மரண அறிவித்தல்.இராசையா நவரத்தினராஜா

மலர்வு,26.09.48.        உதிர்வு.05.07.14.
பிறந்தஇடம்  பத்தைமேனி  வாழ்ந்த:இடங்கள்  சிறுப்பிட்டி .சுவிஸ்.so.
அச்சுவேலி பத்தைமேனியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை (மடத்தடி ஒழுங்கை) வதிவடமாகவும் கொண்ட இராசையா நவரத்தினராஜா நேற்று (05.07.2014) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் இராசையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், பாலசிங்கம் பொன்னம்மா தம்பதியரின் மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சோபனா, பிரதீபா (நியூசிலாந்து), மதுரா ஆகியோரின் அன்புத் தந்தையும், யோகலிங்கம், (பலநோக்குக் கூட்டுறவு சங்கம்அச்சுவேலி), ஜெயசீலன் (நியூசிலாந்து) ஆகியோரின் மாமனும், கனகரஞ்சிதம், காலஞ்சென்ற சறோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், இராசதுரை சந்திராதேவி, கோபாலகிர்ணன், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் மைத்துனரும், கணேஸ்குமார், சசிக்குமார், கிருஸ்ணகுமார், குமார், சுகந்தினி, யோதினி, துஷ்யந்தன், கமலதாசன், சஜீவன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனும், நிவேதிகா (வேம்படி மகளீர் தேசிய பாடசாலை), கபிஸ்னா (யா/இந்து ஆரம்ப பாடசாலை), ஷாய்சரன், ஆகாஸ், ஆருஷா (நியூசிலாந்து) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : கோ. யோகலிங்கம் (மருமகன்) (பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் அச்சுவேலி) 
தொடர்புகளுக்கு  
கோ. யோகலிங்கம் (மருமகன்) (பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் அச்சுவேலி)

அன்னாரின் பிரிவால் வாடும்
அவர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைதெரிவிக்கின்றோம்