வியாழன், 30 ஏப்ரல், 2015

கதவில் சிசுவை தொங்கவிட்டு சென்ற கொடூர தாய்!

பிறந்து மூன்றே நாளான குழந்தையொன்றை துணிப்பையொன்றிற்குள் வைத்து சிறுவர் காப்பகம் ஒன்றின் வாசற் கதவில் தொங்கவிட்டுச் சென்ற சம்பவம் அநுராதபுரத்தில்
 நடந்துள்ளது. நேற்று இந்த குழந்தை மீட்கப்பட்டது.
காப்பக ஊழியர் ஒருவர் கண்டதின் பலனாக மீட்கப்பட்ட குழந்தை அநுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் அதேவேளை குழந்தையின் 
தாயைத் தேடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.sesu
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 25 ஏப்ரல், 2015

மரண அறிவித்தல் அமரர் திரு .கந்தையா சச்சிதானந்தம்


அமரர் திரு .கந்தையா  சச்சிதானந்தம் அவர்களுக்கு  இந்த இணையங்களும்
 நவற்கிரி மக்களினதும் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் ஆத்மா சாந்தி அடய  பிரத்திக்கின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

பேருந்து விபத்தில்18 பேர் படுகாயம் அடைத்துள்ளனர்

யாழ்.நாவற்குழி சந்தியில்  இடம்பெற்ற பேருந்து விபத்தில் 18 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாவற்குழி சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றுவதற்காக காத்திருந்த பேருந்து மீது, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து பின்பக்கமாக மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் 2 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 பேரில் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதுடன், அவர்களில் ஒருவர் பாடசாலை மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மின்சார நிலையப் பகுதியில் ராடர் கருவி மூலம் ஆய்வு!

  சுன்னாகம் மின்சார நிலையப் பகுதியில்  ராடர் கருவி மூலம்  ஆய்வு 
வடக்குமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் சுன்னாகம் பகுதி நிலக்கட்டமைப்பை ஆராயும் நடவடிக்கைகள் நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுன்னாம் மின்சார நிலையப் பகுதியில் உள்ள பிரதேசத்தில் கழிவு ஒயில் நிலத்தில் கலந்துள்ளமை தொடர்பில் ஆராயும் பொருட்டு ராடர் கருவி மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட ராடர் கருவியின் உதவியுடன், தொழில் நுட்பவியலாளர்களை உள்வாங்கி வடக்கு மாகாண சபை அமைத்த நிபுணர்குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 18 ஏப்ரல், 2015

நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பவைத்தது சிறிலங்கா

வடமாகாணத்தில் முழுமையாக அரச நிர்வாகத்தை உருவாக நடவடிக்கை எடுத்து வருவதாக, சிறிலங்காவின் அரசாங்கம் நெதர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்ப வைத்துள்ளது.
நெதர்லாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வடக்கில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுகு;கப்பட்டுள்ளதாகவும், முழுமையான குடியேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பாரிய அளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் வடக்கில் இருந்து ஒரு இராணுவ முகாமையேனும் வெளியேற்றப் போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 6 ஏப்ரல், 2015

தூக்கில் தொங்கி 7 பிள்ளைகளின் தந்தை மரணம்!!!

ஏழாலை தெற்கு மயிலங்காட்டை சொந்த இடமாகக் கொண்ட தச்சுத் தொழிலாளி  இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
இன்று காலை 7.45 மணியளவில் மயிலங்ககாடு அம்மன் கோவிலில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 7பிள்ளைகளின் தந்தையும், 69 வயதுமான வைரமுத்து சண்முகலிங்கம் என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
வைரமுத்து சண்முகலிங்'கம் மயிலங்காடு அம்மன் கோவிலடியில் தச்சுத் தொழில் செய்து வந்துள்ளார்.நேற்று இரவு வீட்டுக்குச் சென்று இரவு உணவு உட்கொண்டுள்ளார்.பின்னர்.காலை எழுந்து பார்க்கையில் அவர் வீட்டில் இல்லை.பிள்ளைகளும், மனைவியும் வேலைக்குச் சென்று விட்டதாக எண்ணி அவரைத் தேடவில்லை.
இருப்பினும் காலை மயிலங்காடு அம்மன் கோவிலடியால் வந்த சிலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக சுன்னாகப் பொலிஸாருக்கு அறிவித்தனர்.  
அதன்படி குறித்த இடத்திற்கு வந்த சுன்னாகப் பொலிஸார்  குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் குறித்த நபர் நீண்டகாலமாக இதயநோய் தாக்கத்திற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>