புதன், 25 மார்ச், 2015

விநாயகர் ஆலய விக்கிரகங்கள் திருட்டு

மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பழமைவாய்ந்த மூல விக்கிரகம் உட்பட பல விக்கிரகங்கள்,  திங்கட்கிழமை இரவு மாயமாகியுள்ளதாக ஆலய வழிபடுவோர் சங்க உறுப்பினர் ஒருவர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மருதடி விநாயகர் ஆலயம், கடந்த 2004ஆம் ஆண்டு உடைக்கப்பட்டு 250 மில்லியன் ரூபாய் செலவில் கருங்கல் ஆலயமாக நிர்மாணிக்கப்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
பழைய விக்கிரகங்களை பாலஸ்தானம் செய்து அகற்றி புதிய விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையிலேயே மேற்படி பழைய விக்கிரகங்கள் காணாமல் போயுள்ளன.
பிள்ளையார், சிவன், பார்வதி, சண்டேஸ்வரர், நவக்கிரகங்கள் உட்பட பல விக்கிரகங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.!!சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 14 மார்ச், 2015

பாக்கு வெற்றிலையுடன் போதை கலந்த விற்பனை. செய்தவர் கைது

 யாழ்.சுன்னாகம் நகரப் பகுதியில் போதைப்பொருள் கலந்த பாக்கினை வெற்றிலையுடன் சேர்த்து விற்பனை செய்த கடை உரிமையாளரை நேற்று வியாழக்கிழமை மாலை சுன்னாகம் பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த கடைக்குச் சென்ற பொலிஸார் தாமும் போதைப் பொருள் வாங்குவது போலப் பாசாங்கு செய்து கடையுரிமையாளரைக் கைது செய்துள்ளனர். அத்துடன் அவரிடமிருந்து போதைப் பாக்குகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 11 மார்ச், 2015

தூக்கில் தொங்கிய நிலையில் சிப்பாய்!!!

யாழ்ப்பாணம் மயிலிட்டி 10ஆவது பொறியியல் பிரிவு படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்  ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை படைமுகாமிற்கு பின்புறத்தில் உள்ள மாமரம் ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பதவிவெல ரந்தெனிகல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய புஸ்பகுமார என அடையாளம்  காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


ஞாயிறு, 8 மார்ச், 2015

இரு விபத்து சம்பவங்களில் நால்வர் பலி! மூவர் படுகாயம்!


மாத்தளை பிரதேசத்தில் இன்று பகல் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் தற்பொழுது மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதி வேகமாக பயணித்த லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையை விட்டு விலகியதினாலேயே இவ்விபத்து நிகழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.
இதேவேளை சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதினால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து :கணவனும் மனைவியும் பலி இரு பிள்ளைகள் படுகாயம்
இரத்தினபுரி, பெல்மதுளை பிரதேசத்தில் இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.
இவர்களது இரு பிள்ளைகள் உட்பட ஏழு பேர் படு காயமடைந்துள்ள அதேவேளை பிரதேச ஊடகவியலாளர் ஒருவரின் கால் முறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதிக்கொண்ட முச்சக்கரவண்டிகளுடன்  மேலும் இரண்டு மேட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானதாக காவத்தைப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டிகள் மோதிக்கொண்டதில் அவற்றில் ஒன்றில் பயணித்த இரத்தினபுரி மல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் 30 வயதுகள் என அறியப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர்.
பெல்மதுளையிலிருந்து பண்டாரகம நோக்கியும் இரத்தினபுரியிலிருந்து பெல்மதுளை நோக்கியும் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டிகளே முதலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதேவேளை இதே பகுதிகளில் வந்த இரு மோட்டார் சைக்கிள்களும் மோதுண்ட முச்சக்கரவண்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் கால் முறிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>