வியாழன், 21 மே, 2015

ரயில் நிலையம் அருகில் சிசு ஒன்று மீட்பு

கிளிநொச்சி ரயில் நிலையம் அருகில் இருந்து பெண் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் வீதியால் சென்ற பொதுமக்கள் அழுகுரல் கேட்ட திசையை நோக்கிச் சென்று சென்று பார்த்தபோது
அங்கே பெண் சிசு ஒன்று அநாதரவான நிலையில் காணப்பட்டுள்ளது. சிசுவைக் கண்டெடுத்த அவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கையளித்தனர். பொலிஸார் அந்த சிசுவை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 16 மே, 2015

உதைபந்தாட்ட ஹாட்லி, உடுப்பிட்டி இறுதிப் பலப்பரீட்சை

பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற அரை இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றன உடுப்பிட்டி அ.மி. கல்லூரி மற்றும்
                                                 பருத்தித்துறை ஹாட்லிக்  கல்லூரி.
வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டத் தொடரின் 19 வயதுப் பிரிவினருக்கான ஆட்டங்கள் நேற்று இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியும், நெல்லியடி மத்திய கல்லூரியும் மோதின. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதற்பாதி ஆட்டத்தில் இரு அணியினருக்கும் கோல் போடுவதற்கான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவர்கள் அதனை தவற விட, ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியினரும் எந்தவித கோல்களையும் பெறாது சமநிலை வகித்தனர்.
இடைவேளையின் பின் இரு அணியினரும் சில மாற்றங்களுடன் அதிரடி வியூகங்களை வகுத்து களமிறங்க மைதானத்தில் இரு அணி ஆட்டத்திலும் அனல் பறந்தது. இதனால் பந்து இரு பகுதி கோல் பகுதியையும் மாறி மாறி ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது.
ஆட்டத்தின் 17, 19 ஆவது நிமிடங்களில் ஹாட்லிக் கல்லூரி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தின் சம நிலைத்தன்மையை மாற்றி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். முடிவில் ஹாட்லிக் கல்லூரி 2:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதிபெற்றது.
இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அ.மி. கல்லூரியும் வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரியும் மோதின. இதில் 3:0 என்ற கோல் கணக்கில் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 14 மே, 2015

இன்று கொலை குற்றவழிகளுக்கு மரண தண்டனை---

கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூவருக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டு கொழும்பு கிரான்ட்பாஸில் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று நபர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எதிராக வழக்கறிஞர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட கால விசாரணைக்குப் பின்னர் வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு உயர்நீதிமன்ற நீதவான் பத்மினி ரணவக்க குணதிலக்க தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>