புதன், 17 டிசம்பர், 2014

பெண்ணொருவர் வெட்டிக் கொலை

கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் தும்மசூரிய - பிபிலாதெனிய விஹாரைக்கு அருகில்  வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 12 வயதான பெண் பிள்ளை, 6 மற்றும் 3 வயதான இரு ஆண் பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். 

சம்பவத்தில் பிபிலாதெனிய பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணின் கணவர் அவரை விட்டுச் சென்றுள்ளதாகவும், பின்னர் தனியாக வாழ்ந்த அவரிடம் சில ஆண்களுக்கு தொடர்பிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

நேற்று மாலை அவர் தனது மகளுடன் சென்று கொண்டிருந்த வேளை மறைந்திருந்த இருவர் அவரைத் தாக்கியுள்ளனர், இதன்போது மகள் அவரை காப்பாற்ற முயற்சித்து குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். 

எனினும் வெட்டுக்காயத்திற்கு இலக்காக குறித்த பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

சடலம் குறித்த பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ள குறியாப்பிட்டிய நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதவான், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பொலிஸாருக்கு குறிப்பிட்டார். 

தும்மலசூரிய பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



சனி, 6 டிசம்பர், 2014

பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!


யாழ்ப்பாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய ரொஹான் டயஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதேவேளை பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வித்தியாலங்கார யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டத்திற்கு அமைய அரச அதிகாரிகள் எவருக்கும் இடமாற்றங்களை வழங்க முடியாது. இந்த நிலையில், தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>